To read in Tamil you need a computer which supports unicode.
சில நூற்றாண்டுகளுக்கு முன் சித்தார்த்த கொளதம போதிமரத்தடியில் அமர்ந்து வாழ்க்கையில் கர்மாவின் பாதிப்பை பற்றி தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது தேவன் அவருக்கு இயேசுவைக் குறித்தான் ஒரு தீர்க்கதரிசன செய்தியை அவருக்கு வெளிப்படுத்தினார், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்".
|
புத்தருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக வழக்கத்திற்கு வந்த நிர்குணபிரம்மா என்ற கருத்தை மையமாகக் கொண்டு புத்தருடைய போதகம் இருந்ததாக சிலர் கருதினர். இந்த போதகத்தின்படி தெய்வத்துவம் அளவிடற்கரியது மாத்திரமல்ல அதைக்குறித்து ஓம் என்ற சொல்லும் வழக்கத்தில் இருந்து வந்தது. இதன்படி ஓம் என்ற வார்த்தை உருவாக்கப்படவில்லை. பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பே இவ்வார்த்தை இருந்தது, இன்னும் அவ்வார்த்தை இருக்கிறது மாத்திரமல்ல, இப்பிரபஞ்சம் அழிந்து போனாலும் அவ்வார்த்தை அழியாது. ஓம் என்ற வார்த்தை முடிவில்லாத அநாதியான அளவிடற்கரிய தேவனைக் குறிக்கிறது.
|
நம்முடைய கலாச்சாரத்தில் ஓம் என்ற வார்த்தைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. சமஸ்கிருதா சுலோகங்கள் முடிவில்லாத அநாதி தேவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஓம் என்றே ஆரம்பமாகும். ஞான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஓம் என்ற வார்த்தையை தியானிப்பதன் மூலம் தேவ சிந்தனையை அடைய முயற்சிப்பார்கள். ஓம் என்ற வார்த்தை நம் கலாச்சாரத்தில் ஒரு முக்கியயிடத்தை வகிக்கிறது. இது நாம் தேவனை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள நமக்கிருக்கும் தாகத்தை வெளிப்படுத்துகிறது. இதற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
கடவுள் என்ற அளவிடற்கரிய பிரபஞ்ச உண்மையை நாம் அனுபவித்து அறிந்து கொள்வது எப்படி?. இப்படிப்பட்ட இடத்தில் தன் நாம் இயேசு ஜெயந்தியை அறிந்து கொள்ள வேண்டும். நட்சந்திரங்களையும் கோள்கள்யும் உண்டாக்கின தேவன் கிழக்கத்தியர்களும் தன் பிறப்பை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். வான சாஸ்திரங்களின் மூலம் இயேசு ஜெயந்தியைக் குறித்து முக்கிய ஆதாரங்களை தேவன் வெளிப்படுத்தினார். இந்த பெத்லகேம் நட்சத்திரத்தின் மூலமாக கிழக்கத்தியர்களும் இயேசுவின் பிறப்பை அறிந்து அவர் பிறந்த பின் அவரைப் பார்க்க சென்றனர். என்னால் இயன்றமட்டும் நான் இந்த புதிரைப்பற்றி விளங்கும் போது நீங்கள் தேவனோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. நம் மனதில் இருக்கிற இரகசியங்களை அறிகிற தேவன் நம்முடைய இந்த பணிவான வேண்டுதலை மறுப்பாரோ?. நிச்சயமாக மாட்டார். எனினும் இப்படிப்பட்ட உறவை தேவனுடன் ஏற்படுத்திக்கொள்ளும் முன் ஒரு உண்மையான தடையை நாம் விளக்கி கொள்ள வேண்டும்.
இயற்கையாகவே நாம் தேவனிடத்திலிருந்து துண்டிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம். இதை கிழக்கத்திய போதகர்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்து மதம் ஒரு சமுத்திரத்தை போல பெருகி கொண்டே வருகிறது. ஆனால் எவ்வளவு பெரிய சமுத்திரமும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற அணுக்களால் உருவானது தான். அது போல நம் கலாச்சார போதகத்தைப் பொருத்தமட்டில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் இரண்டு காரியங்கள். அவை கர்மா, மாயை என்பனவாகும். ஒரு காரியத்தின் காரணம், பலன் இவற்றைக் கொண்டே கர்மா அமையும். நம் சுய நினைவை மறந்து அறியாமையில் இருப்பது தான் மாயை.
என் அன்ப்பார்ந்த சகோதர சகோதரிகளே, இயேசு ஜெயந்தி நாம் பயன்படும்படி ஏற்படுத்தப்பட்டது. இயேசு ஜெயந்தி மூலம் அளவிடப்பட முடியாத தேவனை நாம் கண்டு அறிந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு ஏற்ப்படுத்தப்பட்டது. அநாதியான இயேசு, இயேசு ஜெயந்தியன்று மனித உருவெடுத்து நம்முடைய கர்மத்திற்கு பிரயாச்சித்தம் ஆனார். தேவனுடைய இந்த உபகாரத்தை ஏற்றுக் கொள்ள நாம் வாழ்கின்ற மாயையை உடைத்தெறிய வேண்டும். எப்படியோ அளவிடற்கரிய தேவனை மனித முயற்சியில் அடையலாம் என்ற மாயையில நாம் இருக்கின்றோம். தேவன் தன்னுடைய ஒளியின் மூலம் இந்த மாயையை தகர்தெறிய அனுமதிப்பீர்களா?. அப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் பக்கத்தில் உள்ள தடைகளை நீங்கள் தகர்த்து எறியும் போது உங்கள் கர்மத்திற்கு தேவனுடைய மன்னிப்பைப் பெற்று உண்மையான கிறிஸ்த்துமஸ் பரிசுக்கு நீங்கள் தயாரகிறீர்கள்.
"உண்மையான கிறிஸ்த்துமஸ் பரிசு என்றால் என்ன?." என்று நீங்கள் கேட்கலாம். இயேசு நமக்காக மரித்து பிரயாச்சித்தமான பின்பு அவர் உயிர்த்தெழுந்து நமக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். அது தான் பவித்ர ஆத்மா அல்லது பரிசுத்த ஆவி என்பது.
இயற்கையில் நம் ஆத்மா தேவனை விட்டு பிரிந்து காணப்படுகிறது. இயேசுவின் மரணத்தை நம் பாவங்களுக்கு பிராயச்சித்தமாக ஏற்றுக் கொள்ளும் போது இயேசுவை நம் ஆத்ம குருவாக ஏற்றுக் கொள்கிறோம். அப்போது தேவன் நம் ஆத்துமாவோடு இடைப்பட்டு நம் மாயையை மாற்றுகிறார். தேவனுடைய வழிகளுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுக்கும் போது நம் உள்ளார்ந்த குரு நம்மை இயேசுவைப் போல மாற்றுகிறார். இந்த உண்மை நம் கலாச்சாரத்தில் பல நூற்றாண்டுகளாக மறைத்திருக்கிறது.. இந்த பரிசை நாம் பெற்றுக்கொள்வதற்கு பல மத சம்மந்தமான தடைகளை கடந்து வருவது அவசியம். இந்த மாற்றத்திற்காக நாம் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது நாம் எழுச்சி பெற்று இந்த வாழ்க்கையில் மோட்சத்தை ( இரட்சிப்பை ) பெறுகிறோம். இயேசு மதங்களுக்கு கட்டுப்பட்டவர் அல்லாததினால் கிழக்கித்தியர்களாகிய நாமும் இந்த பரிசை பெறுகிறோம்.
தேவனுடைய மீட்புப் பாதையில் தேவன் நமக்கு வழியும் முக்தி அடைவதற்கான காரணமாய் இருக்கிறார். நாம் தேவனை கண்டடைய எடுக்கும் முயற்சிகளை விட்டு தேவன் நம்மை கண்டடைய எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் நம்மை ஒப்புகொடுபோமா?. வேத ஞானம் மட்டும் நம்மை முடிவு வரையில் கொண்டு சேர்க்குமா?. தேவனுடைய வழிக்கு நம்மை நாம் மவுனமாக ஒப்புக்கொடுப்போம். அப்போது அவருடன் நாமும் இணைக்கப்படுவோம்.
இது ஒரு மதமாற்றத்திற்கான அழைப்புதல் அல்ல. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று உண்மையான பரிசை ஏற்றுக்கொள்வோம். நம் ஆன்மீக வாழ்க்கையை புதுப்பித்து மீண்டும் ஆரம்பிப்போம். தேவன் நம் ஆத்ம தாகத்தை தீர்ப்பாராக. மேலும் விவரங்களுக்காகவும், கேள்விகளுக்காகவும் இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
|
|
|
 |