jtemplate.ru - free extensions for joomla

Diwali - Celebrate the light (Tamil)

Transcript of the video message in Tamil (To switch to English click here) : 

தீபாவளி பண்டிகை என்பது ஒளியின் திருவிழா; எனவே இந்த ஒளியின் திருவிழாவை கொண்டாட தங்களை அன்போடு அழைக்கிறேன்.

இந்தியாவில், தீபாவளி பண்டிகை நாட்கள் அமெரிக்காவின் கிறுஸ்துமஸ் நாட்களை போல கொண்டாடபடுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீடுகளிலும் கோலாகலமாக  பட்டாசு விளையாட்டுகள், பரிசு பொருட்களுடன் பல விதமான இனிப்பு பண்டகளை உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்வர்.

தீபாவளி என்ற வார்த்தை விளக்குகளின் வரிசையை குறிக்கும்.  வீடுகள் அனைத்தும் களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். ஒரு வகையில் நம்மையும் இந்த அகல்விளக்குகளுக்கு ஒப்பிடலாம்,  அகல்விளக்குகள் எப்படி ஒளியை (வெளிச்சத்தை) தாங்கியுள்ளதோ அதேபோல இயற்கையாகவே நாமும் அவ்விதமான வெளிச்சத்தைப் பெற்று அதை தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

 

 

 நம் எல்லோருக்கும் வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள தீராத ஏக்கமுண்டு,  அதற்குக் காரணம், வெளிச்சம் மாத்திரமே நமக்குள்ளிருக்கும் இருளை நீக்கிவிடும்.  உதாரணத்திற்கு நம்முடைய ஜெபம் (ஸ்லோகம்) "தமோசோம ஜோதியர் கமையா" அதன் பொருள் "இருளிலிருந்து வெளிச்சத்திற்கு என்னை வழி நடத்தும்" என்பதே.  நமக்குள் வெளிச்சத்தை (அறிவொளியை) எப்படியாவது பெற்றுக்கொண்டு அதன் மூலம் உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளை கொண்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம்.

பல வருடங்களுக்கு முன்பு, என் ஆன்மீக வெளிச்சத் தேடல் முயற்சியின் ஒரு காலகட்டத்தில், எனக்கு ஒரு குரு இருந்தார் அவர் "வேதா" "அத்திரி" என்ற பட்டத்தையுடையவர்.   "வேதா" என்றால் "அறிவு", "அத்திரி" என்றால் "மலை" என்று பொருள்படும். அவர் மாபெரும் ஆன்மீகவாதியாக கருதப்பட்டார், சர்வதேச அளவில் அவரை பலர் பின்தொடர்ந்தார்கள். பல வருடங்கள் அவரை நான் பின்தொடர்ந்தும் அவர் கூறும் அறிவொளியின் (வெளிச்சத்தின்) நிலையை அடையமுடியவில்லை. எங்களில் சிலருக்கு குருவை தனித்து சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, அவருக்கு இந்த அறிவொளியின் (வெளிச்சத்தின்) நிலையை அடையமுடிந்ததா என்று கேட்டோம். அதற்கு அவர், "என் வாழ்நாள் முழுவதிலும் சாத்தியமில்லை" என்று நேர்மையுடன் பதிலளித்து எங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.  மாபெரும் ஆன்மீகவாதியான இவருக்கே வாழ்நாள் முழுவதிலும் சாத்தியமில்லாதபோது, சாதாரண எனக்கு எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எனக்குள் எழும்பியது. 

நாம் தொடர்ந்து முயற்சிக்கலாம், ஆனால் ஒருபோதும் அறிவொளியின் (வெளிச்சத்தின்) நிலையை அடையமுடியாதா?  நாம் அறிந்த  வேறு வழி ஏதாகிலும் உண்டா? மெய்யான ஒளியாகிய இறைவனே (ஆண்டவரே) இந்த அறிவொளியின் (வெளிச்சத்தின்) நிலையை நமக்கு கொடுக்க முடியுமா?  இறைவன் (ஆண்டவர்) தனிப்பட்ட குருவாக நமக்குள் வசித்துக் கொண்டு இந்த அறிவொளியின் வெளிச்சத்தை நமக்குளிருந்து பிராகசிக்க வைக்க முடியுமா? 

இது இறைவனின் அணுகுமுறையாக  இருந்தால்,, அறிவொளியின் (வெளிச்சத்தின்) நிலையை அடைய இதுவே சிறந்த வாய்ப்பாக இருக்கும் அல்லவா?  இதையே நான் உறுதியாக நம்பினேன்.

சுவாரஸ்யமாக, என் குருவை சந்தித்த சில வருடங்களிலேயே, இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை நமக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் செய்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். 

ஒருமுறை இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு போதிக்கும் போது கூறியவதாவது, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்."

இந்த வார்த்தைகளை கேட்ட பின், நாம் இப்படி யோசிக்கலாம், நான் சரியானவன் இல்லை, எனக்கு தெரிந்து அநேக தவறுகளை நான் செய்திருக்கிறேன். எனக்குள் இருள் இருக்கிறது, இறைவன் என்னை மன்னிக்க விரும்புவாரா? எனக்கு உதவி செய்வாரா? இது போல பல கேள்விகள் எழும்பலாம், இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் "இறைவன் முற்றிலும் நமக்கு உதவி செய்ய விரும்புகிறார் என்பதே." இதன் உண்மை நிலை என்னவென்றால், நம்மை பற்றி முழுவதும் இறைவனுக்கு தெரிந்திருந்தும் அளவுகதிகமாய் அவர் நம்மை நேசிக்கிறார், நம்முடைய இருளை நீக்க அவர் பாடுபட முடிவெடுத்தார். நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதற்காக அவர் தன்னையே பலியாக கொடுத்தார்.  இறைவனிடம் நாம் வருவதற்கு சரியாக திருந்திய பிறகு வரலாம் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை; நாம் உடனே இறைவனிடம் சரணடைந்தால் அவருடைய ஒளியே நம்மை சீர் படுத்திவிடும்.  

என்ன ஒரு அற்புதமான நற்ச்செய்தி!  அறிவொளியின் (வெளிச்சத்தின்) நிலையை அடையும் என்னுடைய முறையையும் இறைவனின் முறையையும் ஓப்பிட்டு பார்த்தால், இறைவனின் முறை எவ்வளவு சிறந்தது என்பது மிகவும் தெளிவாகிறது.

ஆகவே, என்னோடு உலகின் ஒளியான இயேசுவை கொண்டாட தங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்!

இப்போது  நம்முடைய ஜெபம் என்னவென்றால், "அன்பின் தெய்வம் இயேசுவே, என்னுள் வந்து வெளிச்சத்தை பிராகாசிக்க செய்து இருள் நீக்க அழைக்கிறேன்." என்பதாகும்.

 

If you have any question, please click here to ask your question.