நமக்குள் இருக்கும் அசுரனை (தீமையை) வெல்ல முடியும் !

0
945

தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது

தீவாளி, என்று அழைக்கப்படும் தீபாவளியை 100 கோடி மக்களுக்கும் மேல், உலகலவில் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகை மூன்று முதல் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். இது ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கொண்டாட்டங்களில் ஒன்றாகும். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் வகையில், இந்தக் காலத்தில் வீடுகளில் நூற்றுக்கணக்கான விளக்குகள் (அகல் விளக்கு) ஏற்றப்படுகிறது. இந்தக் கொண்டாட்ட மனநிலையின் சிறப்பம்சமே தீபாவளி திருநாளாகும். குடும்பங்கள் ஒன்று கூடி, எண்ணெய்க் குளியல் செய்து நாளைத் தொடங்குகிறார்கள். பின்னர் பரிசுகள் மற்றும் இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வார்கள், இதில் குடும்ப வானவேடிக்கைகள் மிகவும் உற்சாகமான நிகழ்வாகும். பட்டாசுகள் விடியற்காலையில் தொடங்கி, நாள் முடியும் வரை செல்லும். தீபாவளி பண்டிகையுடன் தொடர்புடைய அனைத்து உற்சாகத்தையும் கொண்டாட்டங்களையும் விவரிக்க வார்த்தைகள் போதாது, அதை நீங்கள் நேரிலிருந்து அனுபவிக்க வேண்டும்.

உற்சாகத்திற்கான காரணம்

நமது மரபுகள் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைப் பல கதைகளாகக் கொண்டுள்ளன. பொதுவாக இது அசுரர்களின் மரணத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றன.  (இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட தீய நபர்கள், அப்பாவிகளைப் பயமுறுத்துகிறார்கள்). தீபாவளியை இராமர் தனது வனவாசத்தை முடித்துத் திரும்புதல் (அசுரா இராவணனைத் தோற்கடித்த பிறகு) அல்லது கிருஷ்ணன் நரகாசுரனை (மற்றொரு அசுரனை) தோற்கடிப்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. பல இடங்களில், வானவேடிக்கையின் அற்புதமான நிகழ்வு, பிரமாண்டமாக நடக்கும்போது தீய இராவணனின் அழிவைக் குறிக்கும் வகையில் பட்டாசுகள் நிரப்பப்பட்ட இராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. உள்ளார்ந்த சுய பரிசோதனைக்கு, கிழக்கத்தியர் இதை உள்ளிருக்கும் தீமையைத் தோற்கடிப்பதோடு தொடர்புபடுத்துகின்றனர். இது ஒரு சுய சுத்திகரிப்புச் செயலாகும். பல திரைப்படக் கதைகள் மற்றும் நவீன ஆன்மீக போதனைகள் இராவணனை (தீமை) உள்ளிருந்து அகற்றி, அதனால் நாம் இராமரை (நல்லதை) நமக்குள் தக்க வைத்துக்கொள்கிறோம் என்ற கருப்பொருளைப் பிரதிபலிக்கின்றன. 

ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்: ஆழமான தனிப்பட்ட அர்த்தம் இருக்க முடியுமா?!

எல்லா கொண்டாட்டங்களும் ஒருபுறம் இருக்க, எல்லா தீமைகளையும் நமக்குள்ளிருந்து அகற்ற தீவிரமாக முயற்சித்தோமா? நம்மில் இருந்த தீமையை வெல்வதில் யாராவது உண்மையிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்களா? நமக்குள் இருக்கும் தீமையைத் தோற்கடிக்க மனித முயற்சிகள் மட்டும் போதுமா? நீங்கள் எவ்வளவு தூரம் சென்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, உங்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே அது தெரியும், ஆனால் என்னைப் பொறுத்தவரை பல வருடங்கள் சுயபரிசோதனை மற்றும் சுய சுத்திகரிப்பு முயற்சிகளுக்குப் பிறகும், நான் அந்தத் தீமையை மேற்கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். எனது தோல்விகளின் பட்டியல் மட்டும் வளர்ந்து கொண்டே இருந்தது. பிறகு என்னைவிட அனுபவம் மிகுந்தவர்களுடன் கலந்துரையாடினேன், அவர்களும் அதே படகில் தான் இருந்தனர்.

இந்தியாவின் சமீப கால வரலாற்றிலிருந்து வந்த உன்னதமான நபர்களில் ஒருவரான மகாத்மா (சூப்பர் ஆன்மா) காந்தியை எடுத்துக் கொள்வோம், அவர் இந்தச் சுய சுத்திகரிப்பு முயற்சியில் முன்மாதிரியானவர். மகாத்மா காந்தி ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தார்,  மேலும் உண்மையைப் பின்பற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். இருப்பினும் அவரது சுயசரிதையின் இறுதி அத்தியாயத்தில் ‘பிரியாவிடை’ என்ற தலைப்பில் அவர் குறிப்பிடுகிறதாவது,

“ஆனால் சுய சுத்திகரிப்புக்கான பாதை கடினமானது மற்றும் செங்குத்தானது. பரிபூரண தூய்மையை அடைய ஒருவர் எண்ணம், பேச்சு மற்றும் செயலில் முற்றிலும் உணர்ச்சியற்றவராக மாற வேண்டும். அன்பு மற்றும் வெறுப்பு, பற்றுதல் மற்றும் துண்டித்தல் ஆகியவற்றின் எதிரோட்டங்களுக்கு மேலே உயர வேண்டும். இடைவிடாது பாடுபட்டாலும் அந்த மும்மடங்கு தூய்மை இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன் … ஆனால் நான் கடக்க எனக்கு இன்னும் கடினமான பாதை இருக்கிறது என்பதை அறிவேன்…”

மனிதனால் கடக்க முடியாதது தடை, ஆனால் நம்பிக்கை உண்டு

மகத்தான வாழ்க்கைக்காக மகாத்மா (சூப்பர் ஆன்மா) என்ற பட்டத்தைப் பெற்ற நமது மகாத்மா காந்தி, தனக்கு இன்னும் கடினமான பாதை உள்ளது என்று கூறினால், நம்மைப் போன்ற சாதாரண மக்களான எனக்கும் உங்களுக்கும் எப்படி சாத்தியம்?. நம்மால் இயன்றதைச் செய்தாலும், நமக்குள் இருக்கும் அசுரனை (தீமை) தோற்கடிக்க ஒருகாளும் முடியுமா? அதனால்தான் இதைச் சரி செய்யப் பல பிறவிகள் தேவை என்று நினைக்கிறோமோ? இந்தத் தீமையை ஒழிக்க ஏதாகிலும் வேறு அணுகுமுறை உள்ளதா? நல்ல செய்தி என்னவென்றால் கடவுளின் அணுகுமுறை உள்ளது. அது நம் எல்லோருக்கும் வைக்கப்பட்டு இருக்கிறது. நமக்குள் இருக்கும் அசுரனை நம்முடைய பலத்தினால் அல்ல, கடவுளின் பலத்தால் தோற்கடிக்கப்படுகிறது. ஒருவேளை, இந்தச் சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்வது சிறந்த தீபாவளிப் பரிசாக இருக்கலாம். நாம் இந்த இரகசியத்தை வெளிப்படுத்துவோம்.

நமக்கு உள்ளே இருக்கும் அசுரன்  (தீமை) வெளிப்புறத்தை விடச் சிக்கலானது. நமக்கு நிரந்தர சுதந்திரம் கிடைக்க, கடவுள் இதுவரை நாம் சேர்த்த கர்மாவை (கடந்த),  நமது பழக்கமான தீமைக்கு (தற்போதைய) விட்டுக்கொடுக்கும் நமது போக்கை முறியடிக்கும் திறனை அளிக்க வேண்டும். நம் கடந்த காலத்தின் மீதான இந்த வெற்றி அழியாத இறைவன் இயேசுவே. நமக்காக ஒதுக்கப்பட்ட தண்டனை முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டு, நம் சார்பாக மரணத்தை ஏற்றுக்கொண்டார்.  இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பிறகு பவித்ரா ஆத்மா (கடவுளின் ஆவி) நமக்குள் வந்து வாழ்வதற்கான கதவைத் திறந்தார் (அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார்). பவித்ரா ஆத்மா நம்மில் வாழும்போது, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தீமையைக் கட்டுப்படுத்தும் சக்தியை வழங்கும் கடவுளை அகக் குருவாகக் கொண்டிருக்கிறோம். அக குருவின் வழிகாட்டுதலுக்கு தொடர்ந்து சரணடைவதன் மூலம், உள்ளிருக்கும் அசுரன் மீது தொடர்ந்து வெற்றியைப் பெறுகிறோம்.

இயேசு நம்மை மிகவும் நேசிக்கிறார், நம் ஒவ்வொருவருக்கும் பதிலாக அவர் கஷ்டப்பட முடிவு செய்தார். தீமைக்கு எதிரான உண்மையான உள் வெற்றியை நம் ஒவ்வொருவருக்கும் வழங்குகிறார்.

உலகில் யாரும் சரியானவர்கள் இல்லை என்றும், தங்கள் சொந்த இரட்சிப்பைப் பெறுவதற்கு போதுமான நல்ல செயல்களைச் அவர்கள் செய்ய முடியாது என்றும் கடவுள் அறிந்திருக்கிறார். எனவே தான் கடவுள்  முக்தியை (இரட்சிப்பை) இலவச பரிசாக வழங்குகிறார். நாங்கள் இந்தக் கொண்டாட்டத்தை இயேசு தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

கடவுளின் தீபமாக மாறுவது எப்படி? (இயேசு தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி?)

இயேசு தீபாவளியை அனுபவிக்க – இயேசுவை (கடவுளின் ஒளி) உங்களில் வெளிப்பட நீங்கள் விருப்பம் கொண்டிருக்க வேண்டும். இது தனிப்பட்ட விருப்பம். நமக்கு நித்திய ஜீவன் தேவை என்பதை உணர்ந்து, நம்முடைய எல்லா பாவங்களுக்கும் இயேசு தன்னை முழுமையான பலியாகச் செலுத்தினார் என்று உண்மையாக நீங்கள் நம்பும்போது, அவருடைய இரட்சிப்பை பரிசாகப் பெறலாம். இந்த மீட்டெடுப்பின் ஒரு பகுதியாகப் பவித்ரா ஆத்மா (கடவுளின் ஆவி) நமக்குள் வாழ வருகிறது. கடவுளின் பவித்ரா ஆத்மாவின் மூலம் கடவுளின் வழிகாட்டுதலுக்கு நாம் சரணடையும்போது, கடவுளின் தீபமாக மாறுகிறோம் – ‘இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்’ என்று சொன்னவர், இயேசு கிறிஸ்த்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, நம் இதயங்களிலே பிரகாசித்தார். இந்த மகத்துமுள்ள வல்லமை நம்மால் உண்டாயிரம், கடவுளால் உண்டாயிருக்கிறாதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 

மிகுந்த பக்தியுடன் நாம் கடவுளிடம் ‘தமசோமா ஜ்யோதிர்கமயா’ (தயவுசெய்து என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்) என்று வேண்டிக்கொள்கிறோம், கடவுள் அந்த ஜெபத்திற்க்கு இயேசுவில் பதிலளித்தார். என் அன்பான நண்பரே, நீங்கள் இயேசு தீபாவளியைக் கொண்டாடும்போது உங்களுக்குள் ஒளியைக் கொண்டு வர இயேசுவை அழைக்க உங்களுக்கு விருப்பம் இருக்கட்டும். உள்ளே உள்ள தீமையின் மீது கடவுள் முழுமையான வெற்றியை உடையவர். இந்த அனுபவத்தை நமக்கு அளிக்கும் வகையில் ஒளி நம் இதயங்களில் பிரகாசிக்கும். கடவுளிடமிருந்து வரும் இந்த அறிவொளி (நமக்குள் இருக்கும் ஒளி) நிரந்தரமானது, ‘ஒளி இருளில் பிரகாசிக்கிறது, ஆனால் இருளால் அதை ஒருபோதும் அணைக்க முடியாது’.

இயேசு தீபாவளி நல்வாழ்த்துக்கள்! வாருங்கள் உள்ளிருக்கும் அசுரன் வீழ்ந்த வெற்றியைக் கொண்டாடுவோம்.